திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்த உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் அபராதம்


திருமணத்திற்கு விருந்தினர்களை அழைத்த உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 24 Jan 2021 10:24 AM GMT (Updated: 24 Jan 2021 10:24 AM GMT)

லண்டனில் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக திருமண உரிமையாளர்க்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் நடந்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் திருமண விழாவில் 400 பேருக்கும் மேல் கலந்து கொண்டதால் கொரோனா ஊரடங்கை மீறலுக்காக போலீசார் அந்த தம்பதினர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.

இங்கிலாந்து தலைநகரின் வடக்கே ஸ்டாம்போர்டு ஹில், எகெர்டன் சாலையில் உள்ள யேசோடே ஹடோரா பள்ளிக்குள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் விருந்தினர்கள் ஒன்றாக கூடியிருப்பதை கண்டு காவல்துறை இந்த அபராத்தை விதித்துள்ளனர்.

லண்டனில் காவல்துறையினர் கண்டுபிடித்த மிகப்பெரிய கட்டுப்பாடுகளை இது மீறுகிறது என்று ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Next Story