உலக செய்திகள்

தைவான் மீதான ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதியை அச்சுறுத்துகிறது; சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை + "||" + Taiwan reports large incursion by Chinese air force

தைவான் மீதான ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதியை அச்சுறுத்துகிறது; சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை

தைவான் மீதான ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதியை அச்சுறுத்துகிறது; சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை
தைவான் மீதான சீன ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன், 

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தீவு நாடான தைவான் உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தைவானை அச்சுறுத்தும் விதமாக சீனா சமீபகாலமாக தனது தென்கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ படைகளை குவித்து வருகிறது.

இந்த நிலையில் தைவான் மீதான சீன ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘சீன அரசு தைவான் உட்பட அதன் அண்டை நாடுகளை மிரட்ட முயற்சிக்கும் முறையை அமெரிக்கா கவலையுடன் குறிப்பிடுகிறது. சீனா, தைவான் மீதான ராணுவ, தூதரக மற்றும் பொருளாதார அழுத்தத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தைவான் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’’ என்றார். 

மேலும் அவர் ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களது பகிரப்பட்ட செழிப்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை முன்னேற்றுவதற்காக எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் துணை நிற்போம். அதில் ஜனநாயக தைவான் உடனான எங்கள் உறவுகளை ஆழப்படுத்துவதும் அடங்கும்" எனவும் அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி உளவு தகவலால் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தை நேற்று தாக்குவதற்கு பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவு தகவல் வெளியானது. இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் - அமெரிக்கா
சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
3. ஈராக்கில் பரபரப்பு அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது
5. அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்
அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.