பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி + "||" + Palmas Football Club President, 4 Players Die In Brazilian Air Accident
பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
பால்மஸ்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பால்மஸ் கிளப் கால்பந்து அணியின் பயிற்சியாளர் உள்பட கால்பந்து வீரர்கள் 4 பேர் பலியாகினர். விமானியும் உயிரிழந்தார்.
பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு புறப்பட்ட விமானம், ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கிய விமானம் எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து கால்பந்து அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.