இங்கிலாந்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு: போரிஸ் ஜான்சன் வேதனை


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 26 Jan 2021 9:40 PM GMT (Updated: 26 Jan 2021 9:40 PM GMT)

ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில் தான் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில்தான் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 36,89,746- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.  

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஓவ்வொரு உயிரிழப்புக்கும்  நான் வருந்துகிறேன் என்றார். 

மேலும்,  பிரதமர் என்ற முறையில், அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.


Next Story