உலக செய்திகள்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம் + "||" + Protest held in sri lank

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.
கொழும்பு,

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய ஒத்துழைப்பு மீனவர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கூடியவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.  அதேபோல் நிவரலியா மாவட்டத்தில் உள்ள அட்டன் நகரத்தில் சிவில் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. அதில் விவசாயிகளின் கோரிக்கையை இந்திய அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் விவசாய சங்கங்கள் அறிவிப்பு
மார்ச் 6ந்தேதி டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
2. விவசாயிகளின் நிலைமை குறித்து பாப் நட்சத்திரங்கள் காட்டும் அக்கறையை மத்திய அரசு காட்டவில்லை - ராகுல்காந்தி
விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என ராகுல்காந்தி கூறினார்.
3. பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை - பிரியங்கா காந்தி
பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
4. மத்திய அரசு ஆதரவு டுவிட் இந்திய பிரபலங்களின் டுவிட்டுக்கு பின்னால் 12 செல்வாக்கு மிக்கவர்கள் -மராட்டிய உள்துறை அமைச்சர்
லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் தேண்டுல்கர் ஆகியோரின் டுவீட்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.
5. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்