தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் தடை


தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் தடை
x

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் தடை விதித்துள்ளது.

பிரேசிலா

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்தது. அதேபோல்,  இங்கிலாந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம்  காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது.  பிரேசிலில் 88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்பால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, கடந்த டிசம்பரில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்தது. 70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டதாக புதிய வகை கொரோனா அறிவிக்கப்பட்டது. 

இதனால், இங்கிலாந்து உடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தின. எனினும்,  புதிய வகை கொரோனா 12-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. அதேபோல், தென் ஆப்பிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. 

Next Story