கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் செலுத்திக் கொண்டார்


கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் செலுத்திக் கொண்டார்
x
தினத்தந்தி 27 Jan 2021 1:23 PM GMT (Updated: 27 Jan 2021 1:23 PM GMT)

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்திக் கொண்டார்.

வாஷிங்டன்,
 
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது. சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்படும் அதே வேளையில் அரசியல் தலைவர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த 20 ஆம் தேதி பதவியேற்ற ஜோ பைடன், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். இதேபோல், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் டிச்மபர் 29-ம் தேதி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று செலுத்தப்பட்டது. அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அனைவரும் அவரவர் முறை வரும் போது தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயிரைக் காக்கும் என்று  தெரிவித்தார்.

Next Story