அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக 74 வயது பெண் பதவியேற்பு


அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக 74 வயது பெண் பதவியேற்பு
x
தினத்தந்தி 27 Jan 2021 8:03 PM GMT (Updated: 27 Jan 2021 8:03 PM GMT)

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் என்ற பெண் பதவியேற்று உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் என்ற பெண் பதவியேற்று உள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள, முதல் பெண் என்ற சாதனையையும் இவர் படைத்து உள்ளார். 

முன்னதாக இவரை தேர்வு செய்வதற்கு செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில், 84 உறுப்பினர்கள் யெல்லனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்க அதிபர் பைடன், பொருளாதார ஊக்குவிக்கு தொகுப்பை அறிவித்து உள்ள நிலையில், நிதி அமைச்சராக இவர் பதவியேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story