மியான்மரில் ஒராண்டுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் அறிவிப்பு


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 1 Feb 2021 3:06 AM GMT (Updated: 1 Feb 2021 3:06 AM GMT)

மியான்மரில் ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.

யாங்கூன்,

மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல்  நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது. 

இந்த நிலையில், மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம்  தரப்பில் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

Next Story