பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2.25 லட்சத்தை தாண்டியது


பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2.25 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 2 Feb 2021 2:43 AM GMT (Updated: 2 Feb 2021 2:43 AM GMT)

பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.25 லட்சத்தை தாண்டியுள்ளது.

பிரேசிலா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கியது. கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அதாவது 3-வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. 

பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதிப்பு காரணமாக 595- பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

அதேபோல், ஒரே நாளில் 24, 591- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனாவில் இருந்து 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்.

Next Story