அமேசான் நிறுவன சிஇஓ பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் விலக உள்ளதாக தகவல்


அமேசான்  நிறுவன சிஇஓ  பதவியில்  இருந்து ஜெப் பெசோஸ் விலக உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2021 4:30 AM GMT (Updated: 3 Feb 2021 4:30 AM GMT)

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் போசோஸ், நிறுவனத்தின் சிஇஒ பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக  தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு மூன்றாவது காலாண்டில் விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தொடர்ந்து நிர்வாகத் தலைவர் பொறுப்பில் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமேசான் நிறுவனத்தின் இணையதள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆண்டி ஜெசி சிஇஓ பொறுப்பில் செயல்படுவார் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமேசான் நிறுவனத்தை கடந்த 1994- ஆம் ஆண்டு ஜெப் போசாஸ் நிறுவினார். உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் மாறியது. நிறுவனரான ஜெப் போசாஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார்.  

கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலன் மாஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.

Next Story