இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை


Image courtesy : Saudi Ministry of Media via AP
x
Image courtesy : Saudi Ministry of Media via AP
தினத்தந்தி 3 Feb 2021 1:54 PM GMT (Updated: 3 Feb 2021 1:54 PM GMT)

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு நாட்டிற்குள் நுழைய இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது.



ரியாத்

மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 20 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அல்லது அந்நாடுகள் வழியாக பயணம் செய்பவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தற்காலிக தடை விதித்துள்ளது.

பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் இந்த தற்காலிக தடை அமுல்படுத்தப்படுவதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், பிரித்தானியா, துருக்கி, தென் ஆபிரிக்கா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் , லெபனான், எகிப்து, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 20 நாடுகளுக்கு சவுதி தடை விதித்துள்ளது.

இந்த தடை சவுதி குடிமக்கள் அல்லாதவர்கள், தூதரக அதிகாரிகள், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தடை அமுல்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக இந்த நாடுகளுக்கு பயணித்த மற்ற நாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story