இந்தியா அனுப்பிய 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 7 Feb 2021 7:32 PM GMT (Updated: 7 Feb 2021 7:32 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை காபூலை சென்றடைந்தது.

காபூல்,

 கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகள், அண்டை நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. 

 பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியுள்ளது.  அந்தவகையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,  கொரோனா தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


Next Story