வரும் வாரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும்: ஜெர்மனி


வரும் வாரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும்: ஜெர்மனி
x
தினத்தந்தி 7 Feb 2021 9:50 PM GMT (Updated: 7 Feb 2021 10:10 PM GMT)

பனிப்புயல் காரணமாக வரும் வாரத்தில் ஜெர்மனியில் குறைந்த அளவிலான வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடுமையான பனி மற்றும் குளிர்கால புயல்களால் ஜெர்மனியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் போட்டிகள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த வார இறுதியில், ஜெர்மனியில் கடுமையான குளிர் காலநிலை நிலவியதால் எதிர்வரும் வாரத்தில் வெப்பநிலை மிகக்குறைவாகவே காணப்படும் என வானிலை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜெர்மனியின் பல மாகாணங்களில் 20 செ.மீட்டர் அளவுக்கு  உறைபனி மூடியுள்ளது. மணிக்கு 80கி.மீட்டர் வேகத்தில் காற்றும் வீசுகிறது. 

Next Story