உலக செய்திகள்

பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது, வடகொரியா; ஐ.நா. நிபுணர்கள் அறிக்கையால் பரபரப்பு + "||" + Modernization of nuclear weapons in defiance of sanctions, North Korea; UN Excitement by experts report

பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது, வடகொரியா; ஐ.நா. நிபுணர்கள் அறிக்கையால் பரபரப்பு

பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது, வடகொரியா; ஐ.நா. நிபுணர்கள் அறிக்கையால் பரபரப்பு
பொருளாதார தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி இருக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நிபுணர்கள் குழு பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள்
ஐ.நா. சபையின் விதிகளையும், சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.
குறிப்பாக 2006-ம் ஆண்டு அந்த நாடு முதன்முதலாக நடத்திய அணுக்குண்டு சோதனையும், தொடர்ந்து நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளும் உலக அரங்கை உலுக்கின. அந்த நாட்டின் மீது ஐ.நா.சபையும், அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை அந்த நாடு நடத்தி வந்தது.

நிபுணர் குழு அறிக்கை
இந்த நிலையில் வடகொரியா பற்றிய அறிக்கை ஒன்றை ஐ.நா. சபையின் நிபுணர்கள் குழு அளித்துள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல், கடுமையான பொருளாதார தடைகளை மீறி, வடகொரியா தனது அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை 
நவீனமாயக்கி இருக்கிறது என்பதுதான்.

நவீன ஏவுகணைகள்
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இவை:-

* குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகளையும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் வடகொரியா தனது ராணுவ அணுவகுப்புகளில் காட்டி உள்ளது.

* கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய அணு ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்வதற்கும், தந்திர அணு ஆயுதங்களை மேம்படுத்துவதற்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

* வடகொரியா தனது அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை உருவாக்கி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்கிறது. சர்வதேச வங்கி அமைப்புகளை நாடுகிறது. தீங்கு இழைக்கும் இணைய நடவடிக்கைளை மேற்கொள்கிறது. இப்படியாக பொருளாதார தடைகளை அந்த நாட்டால் தப்பிக்க முடிகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கும், செப்டம்பர் 30-ந்தேதிக்கும் இடையே ஐ.நா. சபையின் உச்சவரம்பை மீறி (உச்சவரம்பு ஆண்டுக்கு 5 லட்சம் பீப்பாய்கள்) அடையாளம் தெரியாத நாட்டிடம் இருந்து பல முறை பெட்ரோலிய பொருட்களை வடகொரியா பெற்றுள்ளது என்பதற்கான படங்கள், தரவுகள், கணக்கீடுகள் இந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழு கூட்டம், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் நடந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாட்டு விரோதத்தை எதிர்கொள்ள இருதரப்பு உறவை வலுப்படுத்த சீனா, வடகொரியா உறுதி
வெளிநாட்டு விரோதத்தை எதிர்கொள்ள இருதரப்பு உறவை வலுப்படுத்த சீனா மற்றும் வட கொரியா உறுதி பூண்டன.
2. கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம்: உயர் அதிகாரிகளை நீக்கி கிம் ஜங் உன் நடவடிக்கை
கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவின் நட்பு நாடாகவும் வடகொரியா விளங்குகிறது.
3. அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயாராக வேண்டும்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
ஜோபைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்கு தயாராக வேண்டும் என தனது அரசுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
4. உடல் மெலிந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!
புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், உடல் நிலை பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வருகின்றன.
5. வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும்: ரஷிய அதிபர் புதின் நம்பிக்கை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா அவ்வப்போது சோதிக்கிறது.