ஆப்பிரிக்க நாடான மொராக்காவில் பரிதாபம்; ஜவுளி ஆலையில் வெள்ளம் புகுந்து 24 பேர் பலி


ஆப்பிரிக்க நாடான மொராக்காவில் பரிதாபம்; ஜவுளி ஆலையில் வெள்ளம் புகுந்து 24 பேர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2021 6:18 PM GMT (Updated: 9 Feb 2021 6:18 PM GMT)

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை வெளுத்துக்கட்டி வருகிறது.

இந்த நிலையில் அங்கு, டாங்கியர் நகரில் ஒரு வீட்டின் அடித்தளத்தில் (பாதாளத்தில்) சட்டவிரோதமாக ஒரு ஜவுளி தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. அந்த ஆலைக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் 20 முதல் 40-க்கு இடைப்பட்ட வயதினர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளம் வந்தபோது அங்கு எத்தனை தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள் என்பது தெரிய வரவில்லை. அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டாங்கியர் நகர வெள்ளத்தில் கார்கள் மூழ்கடிக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் அங்கு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மொராக்கோ நகரங்களில் தடைகளாலும், மோசமான பராமரிப்பாலும் வடிகால்கள், வெள்ளத்தை மோசமாக்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story