உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.73- கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.73- கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 9 Feb 2021 11:59 PM GMT (Updated: 9 Feb 2021 11:59 PM GMT)

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.73- கோடியாக உயர்ந்துள்ளது.


ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்  பல்வேறு நாடுகளில் பரவி புதிய பாதிப்பை ஏற்ப்டுத்தி வருகிறது.  

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,10,73,75,711-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 79,265,566- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23 லட்சத்து  48  ஆயிரத்து 664-பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story