மியான்மரில் அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


மியான்மரில் அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்:  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x
தினத்தந்தி 10 Feb 2021 8:41 PM GMT (Updated: 10 Feb 2021 8:48 PM GMT)

மியான்மரில் கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன்,

மியான்மரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறிய அந்நாட்டு ராணுவம், ஆட்சியையும் அதிரடியாக கைப்பற்றியுள்ளது. அதோடு, மியான்மர்  அரசியல் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரையும் வீட்டுக்காவலில் ராணுவம் வைத்துள்ளது. 

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராட்டங்கள் வெடித்துள்ளன.  போராட்டக்காரர்கள் மீது சில இடங்களில் ராணுவம் கடுமையான பலப்பிரயோகம் நடத்தியதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. உலக நாடுகளின் தலைவர்களும் மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு  காரணமான ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்து  ஜோ பைடன்
 நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான நிறைவேற்று உத்தரவிற்கும் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.  அதேபோல்,மியான்மரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

Next Story