பைசர் தடுப்பூசிக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல்


பைசர் தடுப்பூசிக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 10 Feb 2021 10:38 PM GMT (Updated: 10 Feb 2021 11:15 PM GMT)

கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆக்லாண்டு,

உலக நாடுகளை உலுக்கி கொண்டு வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.   

அந்த வகையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த நியூசிலாந்து அரசு முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக தூய்மை பணியாளர்கள், நர்சுகள், பாதுகாப்பு அலுவலர்கள், சுங்க மற்றும் எல்லை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசியை செலுத்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்தில் இதுவரை 2,324- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story