உலக செய்திகள்

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை + "||" + Sri Lanka bans Valentine's Day celebrations - Police warn

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை
இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கொழும்பு,

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை நாடுமுழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படப்பட உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு  அரசு தடை விதித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி விதிமீறி கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடக பேச்சாளர் மாஅதிபர் அஜித் ரோகன, சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் அவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 474 ரன்கள் குவிப்பு
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.
2. இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
இலங்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை
இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்
5. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை; மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ஓட்டெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தன.