வங்காளதேசத்தில் 8 பேருக்கு மரண தண்டனை பதிப்பாளரை கொன்ற வழக்கில் தீர்ப்பு


வங்காளதேசத்தில் 8 பேருக்கு மரண தண்டனை பதிப்பாளரை கொன்ற வழக்கில் தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 11:40 PM GMT (Updated: 11 Feb 2021 11:40 PM GMT)

வங்காளதேசத்தில் 8 பேருக்கு மரண தண்டனை பதிப்பாளரை கொன்ற வழக்கில் தீர்ப்பு.

டாக்கா, 

வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் பைசல் அபெதின் தீபன் என்ற புத்தக பதிப்பாளர், டாக்கா பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள சந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதேநாளில் நடந்த மற்றொரு கொலை முயற்சியில் இன்னொரு பதிப்பாளரான அகமது ரஷித் துதுல் என்பவர் தப்பித்தார்.

இவர்கள் இருவரும் வங்காளதேச அமெரிக்க எழுத்தாளர் அவிஜித்ராய் புத்தகங்களை பதிப்பித்து வந்தவர்கள் ஆவார்கள். பைசல் அபெதின் தீபன் கொலை வழக்கில் 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, டாக்கா பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், 8 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதி முஜிபுர் ரகுமான் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு அளித்தார். தலைமறைவாக உள்ள 2 பேரையும் கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட அன்சார் அல் இஸ்லாம் போராளி இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Next Story