ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போட்டி


ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போட்டி
x
தினத்தந்தி 13 Feb 2021 10:23 AM GMT (Updated: 13 Feb 2021 10:23 AM GMT)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக தனது வேட்புமனுவை அறிவித்துள்ளார்.

ஜெனீவா

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (யுஎன்டிஎப்) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா (34) உலகின் உயர்மட்ட தூதர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஜனவரி 2022 முதல் தனது இரண்டாவது ஐந்தாண்டு கால அவகாசத்தை எதிர்பார்க்கும் தற்போதைய தலைவர் அந்தோனியோ குத்ரோசுக்கு (71) எதிராக அகன்ஷா போட்டியிடுகிறார்.அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐ.நா.வின் முதல் பெண் பொதுச்செயலாளராக முத்திரை பதிப்பார்.

அந்தோனியோ குத்ரோஸ்மேலும் ஓர் ஐந்தாண்டுகள் பதவியில் இருக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்

அரோரா பார் செக்ரட்டரி ஜெனரல் என்னும் ஹேஷ்டேக்குடன் டுவிட்டரில் அதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கி இரண்டரை நிமிட வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அவரது பிரச்சார வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.அவரது பிரச்சாரத்தில், "75 ஆண்டுகளாக, ஐ.நா உலகிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, அகதிகள் பாதுகாக்கப்படவில்லை, மனிதாபிமான உதவி மிகக் குறைவு மற்றும் தொழில்நுட்பமும் புதுமையும் பின்னடைவில் உள்ளது" என
கூறினார்.

இவ்வளவு தான் ஐ.நா. செய்யமுடியும் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், "நமக்கு இதை விட சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஐ.நா. தேவை. அதனால்தான் நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன்" என்கிறார்.


Next Story