உலக செய்திகள்

பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் பணியிடை நீக்கம் + "||" + Joe Biden's aide fired for threatening female journalist

பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் பணியிடை நீக்கம்

பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் பணியிடை நீக்கம்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.

இதையடுத்து தன்னுடைய பத்திரிகை இணை செயலாளராக டி.ஜி. டக்லோ என்பவரை அவர் நியமித்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் டி.ஜி.டக்லோ வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த டி.ஜி. டக்லோ அந்தப் பெண் பத்திரிகையாளரை நோக்கி 'நான் உன்னை அழித்துவிடுவேன்' என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் டி.ஜி. டக்லோவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் டி.ஜி. டக்லோ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு வார காலத்துக்கு ஊதியமின்றி அவர் பணி நீக்கம் செய்யப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் டி.ஜி. டக்லோ தனது செயலுக்காக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருப்பினும் டி.ஜி.டக்லோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ம.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ம.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.
2. தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகார்: இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம்
தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகாரில் திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
3. சுயேச்சை சின்னத்தில் போட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீக்கம்
சுயேச்சை சின்னத்தில் போட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீக்கம்.
4. கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கம்: விதிகளை மீறியதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம்
கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கப்பட்டதற்கு, அவர் விதிகளை மீறியதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
5. 4வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் இருந்து காயத்தினால் ஹனுமா விஹாரி நீக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயத்தினால் ஹனுமா விஹாரி விளையாடவில்லை.