பிரான்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 21,231 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Feb 2021 1:00 AM GMT (Updated: 14 Feb 2021 1:00 AM GMT)

பிரான்சில் கடந்த 254 மணி நேரத்தில் புதிதாக 21,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 21,231 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,48,617 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் நேற்று அங்கு 199 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 81,647 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,38,753 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 31,28,217 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனால் பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. 

Next Story