ரஷ்யாவில் இருந்து வெனிசுலா சென்றடைந்த ஒரு லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்


ரஷ்யாவில் இருந்து வெனிசுலா சென்றடைந்த ஒரு லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்
x
தினத்தந்தி 14 Feb 2021 9:34 AM GMT (Updated: 14 Feb 2021 9:34 AM GMT)

ரஷ்யாவில் இருந்து வெனிசுலா நாட்டிற்கு ஒரு லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

கராகஸ்,

ரஷ்ய நாட்டில் இருந்து 1 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்படுள்ளது. சிறப்பு விமானம் மூலம் நேற்று வெனிசுலா சென்றடைந்த தடுப்பூசிகளை அந்நாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மாதுரோ பேசுகையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்றும் அடுத்தாக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் உறுதியளித்தார். வெனிசுலா நாட்டில் இதுவரை 1,32,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story