அமெரிக்காவில் மேலும் 58,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அமெரிக்காவில் மேலும் 58,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 14 Feb 2021 10:27 PM GMT (Updated: 14 Feb 2021 10:27 PM GMT)

அமெரிக்காவில் மேலும் 58,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 58,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,255,650 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் நாட்டில் ஒரே நாளில் 954 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 4,97,017 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,82,06,988 ஆக உள்ளது. தற்போது வரை அமெரிக்காவில் 9,551,645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 19,480 பேர் நிலை கவலைகிடமாக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Next Story