அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது


படம் NASA/JPL-Caltech
x
படம் NASA/JPL-Caltech
தினத்தந்தி 17 Feb 2021 2:01 PM GMT (Updated: 17 Feb 2021 2:01 PM GMT)

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது. 7 மாத பயணைத்தை அடுத்து செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்தில் இந்த ரோவர் தரையிறங்க உள்ளது. ரோவார் தரையிறங்கும் கடைசி 7 நிமிடங்கள் திட்டம் வெற்றியடைய மிகவும் முக்கியமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது ரோவர் சரியான திசையில் உள்ளது என தெரிவித்து இருக்கும் விஞ்ஞானிகள், அதனுடைய பாதையில் மேலும் மாற்றங்களை செய்ய திட்டமிடவில்லை என தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே ரோவர் எப்படி தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.


ரோவர் அதனுடன் 7 கருவிகளை கொண்டு செல்கிறது. ஸும் வசதியுடன் கூடிய சூப்பர் கேமரா சிஸ்டமும் அதில் அடங்கும். ரோவரில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான கருவிகளில் ஒன்று மோக்ஸி (MOXIE) இது செவ்வாய் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கும். இந்த கருவி வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு ராக்கெட் எரிபொருளை எரிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது நாள் வரையில் ஒரு மனிதனும் கூட செவ்வாயில் கால் வைத்ததில்லை.

செவ்வாய் கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டரான இன்ஜெனுயிட்டியையும் இந்த ரோவர் செல்கிறது. ரோவர் அடைய முடியாத இடங்களின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க இது உதவும். ஒட்டுமொத்தமாக, ரோவர் பண்டைய வாழ்க்கையின் அறிகுறிகளைப் படிப்பதற்கும், எதிர்கால பயணங்களின் போது பூமிக்கு திருப்பி அனுப்பப்படக்கூடிய மாதிரிகளை சேகரிப்பதற்கும், கிரகத்திற்கு எதிர்கால ரோபோ மற்றும் மனித பயணங்களுக்கு பயனளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story