செவ்வாய் கிரகத்தில் நாளை அடி எடுத்து வைக்கிறது - நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம்


செவ்வாய் கிரகத்தில் நாளை அடி எடுத்து வைக்கிறது - நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம்
x
தினத்தந்தி 18 Feb 2021 9:23 AM GMT (Updated: 18 Feb 2021 9:25 AM GMT)

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ என்ற விண்கலம் நாளை செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா‘ ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம், இந்திய நேரப்படி நாளை தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. 

இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நெருங்கி உள்ளதால், விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story