ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ; 40 பேர் காயம்


ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ; 40 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Feb 2021 12:15 PM GMT (Updated: 18 Feb 2021 12:15 PM GMT)

ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் 40 பேர் காயம் அடைந்தனர்

தெக்ரான்

ஈரானில் இன்று  5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் இன்று  காலை 10.02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 5.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் 40 பேர் காயமடைந்தனர்.

Next Story