உலக செய்திகள்

அமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி: இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி + "||" + Extremely grateful for India's 200,000 Covid vaccines for peacekeepers: UN

அமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி: இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி

அமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி: இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகிற ஐ.நா. அமைதிப்படையினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கும்” என்று அறிவித்தார்.

இதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், “இந்தியாவின் இந்த பரிசுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்த தடுப்பூசியை வினியோகிக்கும் திட்டத்தை ஐ.நா. ஆதரவு துறை மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.

ஐ.நா. அமைதிப்படையில், அமைதி ஏற்படுத்தும் 12 நடவடிக்கைகளில் 94 ஆயிரத்து 484 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்; புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரப்பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர். அதே நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளது.
2. கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது
கொரோனா கால இழப்பை ஈடுகட்ட இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
3. 2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
5. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லைஎன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்து உள்ளார்.