இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருபவர்கள் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு வர வேண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு


இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருபவர்கள் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு வர வேண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 1:23 AM GMT (Updated: 19 Feb 2021 1:23 AM GMT)

இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருபவர்கள் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு வர வேண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு.

துபாய்,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து துபாய் உள்ளிட்ட அமீரகத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை கையில் கொண்டு வர வேண்டும். இந்த பரிசோதனையானது விமான பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் 72 மணி நேரம் முன்னதாக செய்ய வேண்டும்.

தற்போது துபாய் சுகாதார ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி துபாய் நகருக்கு இந்தியாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் கியூ.ஆர். குறியீடு இருக்க வேண்டும். மேலும் இந்த பரிசோதனை முடிவுகளில் பரிசோதனை மாதிரி கொடுக்கப்பட்ட நேரம் உள்ளிட்டவை அனைத்தும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், இந்த பரிசோதனையானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெற்ற ஆய்வகங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும். இந்த கொரோனா பரிசோதனையானது 12 வயதுக்கு குறைவானவர்களுக்கும், உடலில் குறிப்பிட்ட பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையில்லை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

எனினும் எமிரேட்ஸ் மற்றும் பிளை துபாய் விமான நிறுவனங்கள் இது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.


Next Story