புதிதாக 3,294 பேருக்கு தொற்று அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் பலி


புதிதாக 3,294 பேருக்கு தொற்று அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் பலி
x
தினத்தந்தி 19 Feb 2021 1:28 AM GMT (Updated: 19 Feb 2021 1:28 AM GMT)

புதிதாக 3,294 பேருக்கு தொற்று அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் பலி.

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 71 ஆயிரத்து 667 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 431 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 13 ஆயிரத்து 438 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சமீப நாட்களாக குறைந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story