உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.08 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.08 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 19 Feb 2021 2:03 AM GMT (Updated: 19 Feb 2021 2:03 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.57 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 110,822,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 85,764,315 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 51 ஆயிரத்து 402 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 22,605,028 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,529 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 28,523,524, உயிரிழப்பு -  5,05,309 குணமடைந்தோர் - 18,703,421
இந்தியா   -    பாதிப்பு- 10,962,189, உயிரிழப்பு -  1,56,123, குணமடைந்தோர் -10,665,068
பிரேசில்   -    பாதிப்பு - 10,030,626, உயிரிழப்பு -  243,610, குணமடைந்தோர் - 8,995,246
ரஷ்யா    -    பாதிப்பு - 4,125,598, உயிரிழப்பு -    81,926, குணமடைந்தோர் - 3,661,312
இங்கிலாந்து -  பாதிப்பு - 4,083,242, உயிரிழப்பு -   1,19,387, குணமடைந்தோர் - 2,331,001

Next Story