பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா


பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா
x
தினத்தந்தி 19 Feb 2021 1:59 PM GMT (Updated: 19 Feb 2021 1:59 PM GMT)

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

வாஷிங்டன்,

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சிய ஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015- ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது. 

இந்த ஒப்பந்த்தில் முதலில் இணைந்த அமெரிக்கா, டிரம்ப் ஆட்சி காலத்தின் போது விலகுவதாக அறிவித்தது. வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்து வந்த டிரம்ப், பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் அதிபரானால் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என பேசினார்.  

அதன்படி, அமெரிக்காவின்  46-வது அதிபராக பொறுப்பேற்ற சில மணி நேரங்களில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். 

இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது . பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story