உலக செய்திகள்

பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை + "||" + India, China complete disengagement in Pangong lake area: India, China resume talks

பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை

பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை
பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் இன்று 10-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
படைகள் வாபஸ்
கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக மோதல்போக்கு நிலவி வந்தது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்து போர்ப்பதற்றம் தொடர்ந்தது. அதற்கு மத்தியிலும், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இரு தரப்பும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

அதன்பயனாக இரு தரப்பும் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து10-ந் தேதி முதல் படைகளை வாபஸ் பெறும் பணி தொடங்கியது. இதுகுறித்து 11-ந் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிக்கை அளித்தார்.

இன்று பேச்சுவார்த்தை
இரு தரப்பு படைகளும் பாங்கோங் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து திரும்பப்பெறப்படுவது நிறைவு அடைந்துள்ள சூழலில், இன்று (சனிக்கிழமை) இந்திய, சீன ராணுவ தளபதிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சு வார்த்தை நடக்கிறது.

இந்த பேச்சு வார்த்தையானது, கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதி்யில் மோல்டோ எல்லை புள்ளியில் நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக்கில் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ளும் விவகாரம் இடம் பெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்; புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரப்பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர். அதே நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளது.
2. கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது
கொரோனா கால இழப்பை ஈடுகட்ட இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
3. 2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
5. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லைஎன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்து உள்ளார்.