உலக செய்திகள்

ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் + "||" + Will the Harry-Megan couple return to the royal family? Description of Buckingham Palace

ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்துக்கு திரும்புவார்களா? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்
உலகிலேயே சக்தி வாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினர்.‌
இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம் ஓராண்டுக்குப் பிறகு நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவித்தது. ஹாரி மேகன் தம்பதி தற்போது தங்களது ஒன்றரை வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். மேகன் 2-வது முறையாக ‌கர்ப்பமாகி இருக்கிறார்.

இந்தநிலையில் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்திலிருந்து விலகி ஓராண்டை கடந்து விட்ட நிலையில் அவர்கள் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இளவரசர் ஹாரி தனது கவுரவ ராணுவ பட்டங்களை கைவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர்’; மனம் திறந்த ஹாரி-மேகன் தம்பதி
எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக ஹாரி மேகன் தம்பதி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தனர்.‌