உலக செய்திகள்

இத்தாலியில் 28 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை + "||" + Corona impact number approaching 28 lakhs in Italy

இத்தாலியில் 28 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இத்தாலியில் 28 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இத்தாலியில் இதுவரை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரோம்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 ஆக உள்ளது.

ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 235 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 3.82 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53,335 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,59,056 ஆக அதிகரித்துள்ளது.
2. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,09,650 ஆக அதிகரித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,135 ஆக அதிகரித்துள்ளது.
5. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,37,049 ஆக அதிகரித்துள்ளது.