உலக செய்திகள்

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 12,953- பேருக்கு கொரோனா தொற்று + "||" + covid 19 in russia

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 12,953- பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 12,953- பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,953- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 12,953- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 41,51,984 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,623 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

ரஷியாவில் கொரோனா  தொற்றுக்கு மேலும் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 82,876 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 17,484 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், தற்போதுவரை 36,97,433 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது; 2,104 பேர் உயிரிழப்பால் மக்கள் சோகம்
இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய உச்சம் என பதிவாகி உள்ளது. 2,104 பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
2. கர்நாடகாவில் 25 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 25,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் 13.22 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் இதுவரை 13.22 -கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை: அசாம் அறிவிப்பு
வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயமாக வீட்டுத்தனிமையில் இருப்பது அவசியம் என மாநில அரசு அறிவித்துள்ளது.