உலக செய்திகள்

முகக்கவசம் அணிய மறந்ததால் பதறிப்போன ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் -வீடியோ + "||" + German Chancellor Angela Merkel panics after forgetting mask, netizens react - Watch

முகக்கவசம் அணிய மறந்ததால் பதறிப்போன ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் -வீடியோ

முகக்கவசம் அணிய மறந்ததால் பதறிப்போன ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் -வீடியோ
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் மாஸ்க்கை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பெர்லின்

சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து பரவியதால், உலகில் பல்வேறு நாடுகளில் பரவியது. பல லட்சம் உயிர்கள் பலியானது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக உள்ளது.  இதனால் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்து வருகிறது.இதன் காரணமாகவே உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளியில்  வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேபோல, உலக நாட்டின் தலைவர்களும் முகக் கவசத்துடனேயே பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல், நாடாளுமன்ற அவையில் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார்.திடீரென முகக்கவசம் அணியாதது குறித்து நினைவுக்கு வந்த அவர், பதறிப் போய் முகக்கவசத்தை வாங்கி அணிகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. 7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் 7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
2. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புனே மாவட்டத்தில் பார்கள் - உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரெயில் சேவை எப்போது தொடங்கும்? ரெயில்வே அதிகாரிகள் தகவல்
கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரெயில் சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. கொரோனா தடுப்பூசி மையங்கள் விடுமுறை தினங்களிலும் செயல்பட வேண்டும்-மத்திய அரசு உத்தரவு
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தினம் உட்பட அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.