செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் முதல் படங்களை வெளியிட்டது


செவ்வாய் கிரகத்தில்  வெற்றிகரமாக இறங்கிய  பெர்சவரன்ஸ் ரோவர் முதல் படங்களை வெளியிட்டது
x
தினத்தந்தி 20 Feb 2021 5:12 PM GMT (Updated: 20 Feb 2021 5:12 PM GMT)

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் செவ்வாய் கிரகத்தின் நம்பமுடியாத முதல் படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் எடுத்து அனுப்பி உள்ளது.

வாஷிங்டன்

2020 ஆம் ஆண்டு  ஜூலை 30 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், நாசா அனுப்பிய பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது.  பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது. 

செவ்வாய்கிரகத்தில்  வெற்றிகரமாக இறங்கிய பின்னர் செவ்வாய் கிரகத்தின் நம்பமுடியாத முதல் படங்களை பெர்சவரன்ஸ் ரோவர்  எடுத்து அனுப்பி உள்ளது.

300 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காலத்தில் ஏரியாக இருந்த ஜெசெரோ பள்ளத்தை அது  தொட்டபோது அது 1900 லட்சம்  மைல் பயணத்தை முடித்து இருந்தது.

* செவ்வாய் சூரியனில் இருந்து நான்காவது கிரகம்
* ரோமானிய போரின் கடவுளின் பெயரிடப்பட்டது
* செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு பூமிக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் புவியீர்ப்பு வேறுபாடு காரணமாக நீங்கள் இங்கு இருப்பதை விட அங்கு மூன்று மடங்கு உயரத்தில் தான் இருப்பீர்கள் . செவ்வாய் கிரகத்தில் மிகக் குறைந்த ஈர்ப்பு சக்தியே உள்ளது. கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள ஈர்ப்பு பூமியை விட 62 சதவீதம் குறைவாக உள்ளது.அதாவது பூமியில் 100 கிலோ எடையுள்ள ஒருவர் செவ்வாய் கிரகத்தில் 38 கிலோ எடையுள்ளவர்.
* செவ்வாயில் மிக உயரமான மலையை ஒலிம்பஸ் மோன்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது எவரெஸ்ட்டை விட மூன்று மடங்கு உயரம் உள்ளது.
* செவ்வாய் கிரகம் பூமிக்கு அடுத்தபடியாக வாழக்கூடிய இரண்டாவது கிரகமாக கருதப்படுகிறது
* சூரியனைச் சுற்றுவதற்கு செவ்வாய் கிரகத்திற்கு 687 பூமி நாட்கள் ஆகிறது
* இதுவரை, செவ்வாய் கிரகத்திற்கு 39 பயணங்கள் நடந்துள்ளன, ஆனால் இவற்றில் 16 மட்டுமே வெற்றிகரமாக உள்ளன.
* செவ்வாய் கிரகம்  - கிட்டத்தட்ட 411 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் செப்டம்பர் 1610 இல் கண்டுபிடிக்கப்பட்டது 
* செவ்வாய் கிரகத்தை இத்தாலிய விஞ்ஞானி கலிலீயோ கலிலீ கண்டுபிடித்தார் .
* செவ்வாய் பூமியை விட சூரியனிடமிருந்து வெகு  தொலைவில் உள்ளது, இதனால் செவ்வாயின் மேற்பரப்பு குளிரானதாக இருக்கும்
* அங்குள்ள சராசரி வெப்பநிலை -60 சி (-80 எஃப்) ஆகும். இந்த கிரகம் பூமத்திய ரேகையில் 20 சி (68 எஃப்) மற்றும் துருவங்களில் −153 சி (−243 எஃப்) ஐ தாக்கும்.
* செவ்வாய் கிரகம் பூமியை விட மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது, மேலும் அங்கு குறைந்த காற்று அழுத்தம் காரணமாக கிரகம் வெப்பத்தை மிக நீண்ட காலம் தக்கவைக்காது.

Next Story