உலக செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்; பேரிடர் மாகாணமாக அறிவிப்பு + "||" + Severe cold gripping Texas, USA; Notification of Disaster Province

அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்; பேரிடர் மாகாணமாக அறிவிப்பு

அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்; பேரிடர் மாகாணமாக அறிவிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது.
அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை இறங்கி போனதால் மக்கள் குளிரில் உறைந்து போயுள்ளனர்.

சாலைகள், வீடுகளின் மீது பனிக் கட்டிகளாக காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெக்சாஸ் மாகாணத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின் இணைப்பு இல்லாமல் மின் துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக டெக்சாஸ் மாகாண நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வழங்கல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவுக்கு அதாவது ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் மாகாணமாக ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் அந்த மாகாணத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெக்சாஸ் மாகாணத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது செல்வது மீட்பு பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தன்னால் அங்குள்ள அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா விவகாரம்: ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுதி
வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுகமான உறவு இல்லை.
2. ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - ஜனாதிபதி ஜோ பைடன்
ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்று ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று தெரிவித்தார்.
3. எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா- ஜப்பான் நிறுத்த வேண்டும்; சீனா
எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காம்m ஜப்பானும் நிறுத்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் சாலையில் சென்ற கார் மீது மோதி விழுந்து நொறுங்கிய விமானம்; 3 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு பெர்ரி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் பயணித்தனர்.
5. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்துள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்திருந்தாலும் உலகிலேயே அதிக ஆயுதம் இறக்குமதி செய்யும் 2வது நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.