ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Feb 2021 7:49 PM GMT (Updated: 20 Feb 2021 7:49 PM GMT)

ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல் எழுந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்தார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார். இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். 

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமிப்பதற்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் சபை எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story