அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்


அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2021 1:34 AM GMT (Updated: 21 Feb 2021 1:36 AM GMT)

அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டு அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாடர்னா மற்றும் பைசர்/பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்புசிகள் அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவில் இதுவரை  61,289,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை நிலவரப்படி 42,809,595 பேர் ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாகவும், 17,895,667 பேருக்கு இரண்டாவது டோஸ் கிடைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்களாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story