உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு; 3 பேர் உயிரிழப்பு + "||" + Shooting at a gun shop in the US; 3 fatalities

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு; 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு; 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
லூசியானா,

அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளது.  இது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் வேறு 2 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களது நிலைமை சீராக உள்ளது.  துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, ஊழியர்களாகவோ அல்லது தனி நபர்களாகவோ இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொல்லப்பட்ட 3வது நபர் துப்பாக்கியால் சுட்டவர் என்றும் கூறப்படுகிறது.  இதுபற்றி நியூ ஆர்லியன்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முககவசம் அணியாமல் வந்த ரெயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி
வாக்கு வாதம் முற்றிய நிலையில், வங்கி காவலாளி திடீரென ரெயில்வே ஊழியரை கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார்.
2. வேலூர் லாரி மீது பைக் மோதல்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு
வேலூரில் லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.
4. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
5. நைஜீரியாவில் ஆயதமேந்திய நபர்கள் துப்பாக்கி சூடு: 11 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் ஆயதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.