இந்தியா-மாலத்தீவு இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து


இந்தியா-மாலத்தீவு இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 21 Feb 2021 5:54 PM GMT (Updated: 21 Feb 2021 5:54 PM GMT)

இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மாலி,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று இந்தியா சார்பில் ஒரு லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவுக்கு வழங்கினார். 

இரண்டாம் நாளான இன்று மாலத்தீவு ராணுவ மந்திரி மரிய திதியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ கடன் வரம்பு ஒப்பந்தத்தில் (எல்ஓசி) இருவரும் கையெழுத்திட்டனர். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா எப்போதும் மாலத்தீவின் நம்பகமான பாதுகாப்பு பார்ட்னராக இருக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் மாலத்தீவின் கடலோர காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story