உலக செய்திகள்

பிரான்சில் புதிதாக 22,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 159 பேர் பலி + "||" + France reports 22,046 coronavirus infections

பிரான்சில் புதிதாக 22,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 159 பேர் பலி

பிரான்சில் புதிதாக 22,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 159 பேர் பலி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 22,046 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,05,181 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவால் அங்கு மேலும் 159 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 84,306 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,47,127 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 32,73,748 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் குறையாத கொரோனா பாதிப்பு: புதிதாக 22,371 பேருக்கு தொற்று உறுதி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,371 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பிரான்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 21,231 பேருக்கு தொற்று உறுதி
பிரான்சில் கடந்த 254 மணி நேரத்தில் புதிதாக 21,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பிரான்சில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 19,715 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 20,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. பிரான்சில் இருந்து இந்தியா வந்து சேர்ந்த 3 ரபேல் விமானங்கள்
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தன.