உலக செய்திகள்

இங்கிலாந்தில் இதுவரை 1.76 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது + "||" + The first dose of the vaccine has so far been given to 1.76 crore people in the UK

இங்கிலாந்தில் இதுவரை 1.76 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இங்கிலாந்தில் இதுவரை 1.76 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது
இங்கிலாந்தில் நாடு முழுவதும் இதுவரை 1.76 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இங்கிலாந்தில் மொத்தம் 10,406 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், நேற்று 9,834 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் கடந்த சனிக்கிழமை 445 பேர் உயிரிந்த நிலையில், நேற்று 215 பேர் உயிரிழந்தனர். 

இங்கிலாந்தில் இதுவரை 1,20,580 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 சதவீதமாக குறைந்துள்ளது. 

இந்த நிலையில் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 1.76 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியுடன் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,364 பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் புதிதாக 12,364 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,052 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் 39 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்து வரும் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
5. கிரீஸ் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு பாதிப்பு
கிரீஸ் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.