உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி + "||" + Shooting at terror station in the United States; 3 killed

அமெரிக்காவில் பயங்கரம் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கரம் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று உள்ளது.‌ இங்கு நேற்றுமுன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் துப்பாக்கி வாங்குவதற்காக வந்திருந்தனர்.
நியூயார்க், 

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று உள்ளது.‌ இங்கு நேற்றுமுன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் துப்பாக்கி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் அவர்களுக்கு துப்பாக்கிகளை காண்பித்துக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனை நிலையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.‌

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய துப்பாக்கியால் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

துப்பாக்கி விற்பனை நிலையத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன ? என்பது உடனடியாக தெரியாத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் இறந்தார்.
2. ஈராக்கில் வான்தாக்குதல்: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
3. திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தந்தை, மகன் பலி
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானார்கள்.
4. ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
5. சென்னை கோட்டையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
சென்னை கோட்டையில் விஷவாயு தாக்கி 2 பேர் மரணமடைந்தனர்.