சார்ஜா,
சார்ஜாவில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் சார்பில் நேற்று மரக்கன்று நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். ஒரு வாரத்தில் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற சார்ஜா அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.