கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை


கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2021 11:11 AM GMT (Updated: 22 Feb 2021 11:11 AM GMT)

கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.

சார்ஜா,

சார்ஜா பொருளாதார மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சார்ஜா பகுதியில் பிரபலமான ஹைபர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த ஹைபர் மார்க்கெட்டில் பொருளாதார மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக கூட்டத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளும் சரிவர பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக அந்த ஹைபர் மார்க்கெட்டுக்கு சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சார்ஜா பகுதியில் செயல்பட்டு வந்த சலூன் கடை ஒன்றிலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்பட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த சலூன் கடைக்கும் சீல் வைத்து உத்தரவிட்டனர்.

பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லையெனில் பொருளாதார மேம்பாட்டுத்துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கொரோனா தொற்று பரவலை தடுக்க வர்த்தக நிறுவனங்களும், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story